August 27, 2008

நான் ஏன் பதிவு எழுதுனேன்



எல்லார் மாதிரி நானும் ஏன் பதிவு எழுத ஆரம்பிச்சேன்னு சொல்லறேன்...


எனக்கு கல்லூரியில் படிக்கும்போதே ஒரு ஆசைங்க, பெரிய journalista வரணும்னு… அதுக்கும் பதிவு எழுதறதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதீங்க. Journalistna, இந்த ஜோல்னா பைய தூக்கிட்டு வருவாங்களே அப்படி இல்ல, கேமரா எடுத்துட்டு எதாச்சும் பிரச்சனை நடக்கிற எடத்துல போய் படம் எடுத்து அதுக்கு ஏத்த மாதிரி ஒரு டைட்டில் போட்டு ஒரு சின்ன கதை எழுதுற அளவுக்கு ஆசை. ஆசை யார விட்டுச்சு. அப்புறம் அந்த நெனைப்பை தூக்கி ஓரமா வைச்சிட்டேன். எனக்குனு ஒரு கேமரா வாங்குனதுக்கபரம் எனக்கு பிடிச்ச மாதிரி படம் எடுத்து தள்ள ஆரம்பிச்சேன்.

ஆனாலும் உள்ளுக்குள்ள எழுதனும்னு ஆசை மட்டும் இருந்துகிட்டே இருந்துச்சு... ஆனா எப்படி ஆரம்பிகறதுன்னு தெரியல. சும்மா ஒரு பேனாவ எடுத்து எழுதலாம்னு சொல்லாதீங்க... எடுத்து எழுதனும்ல...

கிரின்னு எனக்கு ஒரு நண்பர் இருக்கார். அவரு நெறைய எழுதுவார். பதிவு தான். சிங்கை வந்த பிறகு அவரோட பதிவுகள் படிக்கற வாய்ப்பு கிடைச்சது... அவர்கிட்ட கேட்டுகிட்டே இருப்பேன். எப்படி கிரி இந்த blog எழுதுறதுன்னு... தினம் கேப்பேன் இத... அவரும் விடாம நீ எழுது வித்யானு சொல்லிட்டே இருப்பார்... அவரோட எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கும்... அவர மாதிரி எழுதலைனாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு எழுதனும்னு இருக்கேன்.


அப்படி எழுத ஆரம்பிச்சது தாங்க இந்த பதிவு... இதோட இப்ப 3 பதிவு வந்திரிச்சு, நீங்களும் படிக்க ஆரம்பிச்சிடீங்க... எனக்கே என்ன நம்ப முடியலைனா பாத்துகோங்களேன் :-)

9 comments:

கிரி said...

//கேமரா எடுத்துட்டு எதாச்சும் பிரச்சனை நடக்கிற எடத்துல போய் படம் எடுத்து //

அய்யயோ! வித்யா பீதிய கிளப்புறியே..உனக்குள்ள இப்படி ஒரு சிங்கம் தூங்கிட்டு இருக்கா ..எதற்கும் உஷாரா இருக்கணும் டோய் :-)

ஹலோ! இனி யாராவது பிரச்சனை நடக்குற இடத்துல வித்யா இருந்தா கப்புனு அமுக்கி பிடித்துக்குங்க..இல்ல அப்புறம் நடக்கற கதையே வேற...ஆமா சொல்லிப்புட்டேன் :-))))))))))))))

//கிரின்னு எனக்கு ஒரு நண்பர் இருக்கார். அவரு நெறைய எழுதுவார். பதிவு தான். சிங்கை வந்த பிறகு அவரோட பதிவுகள் படிக்கற வாய்ப்பு கிடைச்சது... //

மனச தொட்டுட்டே வித்யா மனச தொட்டுட்டே ..

//அவரோட எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வேற ஒன்னும் இல்ல ஆனந்த கண்ணீரா வருது

//எனக்கே என்ன நம்ப முடியலைனா பாத்துகோங்களேன் :-) //

ஆமாமா வித்யாவாலையே (வித்யா வோட வால் அல்ல:D) நம்ப முடியலைனா மத்தவங்க ரொம்ப கஷ்டம் தான்... ஆனா வித்யா யாரு நம்புறாங்களோ இல்லையோ நான் நம்புறேன்.

வித்யா அப்புறம் உன்னோட தமிழ் நல்லா இருக்கு..உண்மையாகவே...வாழ்த்துக்கள்

தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

Vidhya said...

//ஹலோ! இனி யாராவது பிரச்சனை நடக்குற இடத்துல வித்யா இருந்தா கப்புனு அமுக்கி பிடித்துக்குங்க..இல்ல அப்புறம் நடக்கற கதையே வேற...ஆமா சொல்லிப்புட்டேன் :-))))))))))))))//

கிரி என்ன வைச்சி காமெடி கீமெடி பண்ணலையே

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வேற ஒன்னும் இல்ல ஆனந்த கண்ணீரா வருது//

அழப்படாது :-)

//வித்யா அப்புறம் உன்னோட தமிழ் நல்லா இருக்கு..உண்மையாகவே...வாழ்த்துக்கள்
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.//

நன்றி கிரி. எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... "why blood same blood" ;-)

Arasi Raj said...

Eluthu eluthu....Eluthikitte iru ......Template nalla irukkudi and your profile picture is cool too.

Vidhya said...

mikka nandri ponnatha avargale.. neenga kalakitu irukeenga.. nan comment vidanum.. wait vareeeeen

Unknown said...

vidhya kalakite da. ana siru siru thappu iruku. athu prechainai illai :) ni nerla pesara mathiriye iruku...super che :) inum neriaya ezhutu da :)

Dhina said...

வித்யா கலகிடீங்க. எல்லாருக்கும் ஒரு ஆசை மனசுல இருக்கும், ஆனா LIFE போற வேகத்துல என்ன மாதிரி சிலரால அதை வடிவமாக்க முடியலை. இந்த விஷயத்துல நீங்க எழுதுனது ஒரு நல்ல ஆரம்பம் அப்டின்னு சொல்லுவேன். உங்க blog நீங்க அப்டியே நேர்ல பேசுற மாதிரி இருக்கு. குறிப்பா // பேனா எடுத்து எழுதனும்ல// அப்டின்னு நீங்க சொன்னது super. எவ்வளவு தான் வாழ்க்கை மாறி போனாலும் காலேஜ் படிக்கும் போது friends எல்லாரும் சேந்து போகணும் (ரொம்ப தூரம் இல்லங்க Madura College'la இருந்து Bus stand வரைக்கும் தான்.) அப்டின்னு B5 பஸ்சுக்கு நின்னதேல்லாம் நினைவுக்கு வருது. இன்னும் நெறையா எழுதுங்க கண்டிப்பா படிப்பேன். உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்

Somz said...

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ! வித்யா கலக்குற போ... நடை நல்ல இருக்கு... நடத்து..!

Vidhya said...

சோமாஸ் :-) thank you for த பாராட்டுகள் :-) மிக்க நன்றி

Vidhya said...

hey sudha... sure will check for the mistakes before i publish the next time :-) thank you for your support dear

Arul.. unga palaya ninaivugaluku poiteengala.. :-) kandipa ezhutharen arul... keep visiting