August 30, 2008

Once upon a time...


Long ago.. long long ago... Nobody can say how long ago... ஹேய்ய் ஸ்டாப் ஸ்டாப் அப்படினு நீங்க எல்லாரும் கத்தறது என் காதுல விழுது... சரிங்க கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நான் கல்லூரில படிச்ச கதை தான் இது... நீ படிச்சது ஒரு பெரிய விஷயமா அப்படினு கேக்காதீங்க...

நான் படிச்சு டாக்டர் ஆகனும்னு எங்க அப்பா அம்மா கனவு, ஹ்ம்ம் எனக்கு கூட இருந்தது அப்புறம் என்னோட மார்க் கொஞ்சம் கம்மி ஆகி, மதுரைல இருந்த ஒரு பெண்கள் கல்லூரில படிச்சேன். சேர்ந்த கொஞ்ச நாள்ளையே எனக்கு நெறைய நண்பிகள் கிடைச்சாங்க... (பொதுவா நான் கொஞ்சம் வாயாடி). வகுப்புக்கு ஒழுங்கா போவேன் ஒழுங்கா படிச்சிருவேன் ஆனா அதுக்கு ஏத்த மாதிரியே சேட்டையும் இருக்கும்...


இதுல குறிப்பா சொல்லனும்னா என்னோட மிக நெருங்கிய தோழியும், இன்று வரை என்னோட சண்டை போடாத அவள் இன்று ஒரு குடும்ப தலைவி, இரண்டு பெண்களுக்கு தாய்... இவள பத்தி நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும்

எல்லா சேட்டை பண்றவங்க மாதிரி நாங்க கடைசி பெஞ்ச்ல தான் ஒக்காருவோம், நாங்க பயப்ட ஒரே மேடம் "வித்யா". இருந்த மூணு வருஷத்துல எனக்கு இப்ப வரைக்கும் அப்படியே ஞாபகம் இருக்கற விஷயம் நாங்க அடிச்ச காப்பி. லேடீஸ் காலேஜ்ல அதுவும் எங்க காலேஜ்ல காப்பி அடிக்கறது பெரிய விஷயங்க. இத ஏன் சொல்றேனா நான் "College Secretary" வேற. இதுல இது வேறையா... பின்னாடி யாரோ சொல்றத கேட்டுட்டு தான் இருக்கேன். முத "internals" ல நான் தான் முதல் மார்க் கிளாஸ்ல, ரெண்டாவது "internals" ல காபி அடிக்கும்போது மாட்டாம எப்படியோ தப்பிச்சிடோம், ஆனா பரீட்சை பேப்பர் வந்தது, கிளாஸ்ல எல்லாருக்கும் பேப்பர் கொடுத்தாங்க ஆனா எங்க ரெண்டு பேருக்கும் கடைசில தான் பேப்பர் கொடுத்தாங்க, பேப்பர்ல மொத்தமா அடிச்சிட்டு "0" அப்படின்னு மட்டும் இருந்தது. எங்களுக்கு மார்க் பாத்து ஏதும் கஷ்டமா தெரியல, எப்படியும் அடுத்த "internals" இருக்கேனு ஒரு நெனைப்பு, ஆனா எப்படிடா "Vidhya" மேடம் மூஞ்சில முளிக்கரதுனு... ரொம்ப அவசியம்னு நீங்க எல்லாம் கஷ்டபடறது தெரியுது... என்னோட பதிவுகள படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்... இப்ப ஒன்னும் செஞ்சிக்க முடியாது :-) செஞ்சிக்க முடியாது...

அப்புறம் "department" ல எல்லா "staff" முன்னாடி இனிமே இப்படி பண்ண மாட்டோம்னு சொல்லிட்டு வந்தோம்... கிளாஸ்கு வந்து ஒரே சிரிப்பு, அடக்க முடியாத சிரிப்பு, சிரி சிரின்னு சிரிசிட்டே இருந்தோம், இதெல்லாம் பெரிய சாதனையான்னு எல்லாரும் யோசிக்கலாம் ஆனா, ஒரு லேடீஸ் காலேஜ்ல படிச்சு பாருங்க அதோட கஷ்டம் தெரியும்... ரொம்ப கஷ்டபட்டுருக்கோம். அப்புறம் காலேஜ்ல "Class bunk" அடிச்சது , "Ma'am" a கிளாஸ் எடுக்க விடாம சும்மா ஒக்காந்து கத பேசுனது, இதெல்லாம் வேற எப்பயாச்சும் சொல்றேன்...

சரிங்க உங்கள எல்லாம் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு... இப்படியே உங்களை எல்லாம் விட்டுருறேன்... மீண்டும் சந்திப்போம்

4 comments:

Sivaram said...

So you have finally started telling stories! Good to see that you are keeping yourself engaged :-)

Intha class matter'laam antha Vidhya ma'am read pannittu irukkaangala? ;-)

One small help... enakku Tamil reading konjam he he he he... :D
English'la irutha vasathi... enna panrathu konar tamil notes use panniye pass aagiyaachu ;-)

கிரி said...

//நான் படிச்சு டாக்டர் ஆகனும்னு எங்க அப்பா அம்மா கனவு, ஹ்ம்ம் எனக்கு கூட இருந்தது //

வித்யா உன்ன்னோட அம்மா அப்பாவுக்கு க்கு இருந்தது சரி உனக்கு கூடவா.. நீ ரொம்ம்ம்ம்ப நல்லவ அவ்வ்வ்வ்வ்

//ஒரு லேடீஸ் காலேஜ்ல படிச்சு பாருங்க அதோட கஷ்டம் தெரியும்... //

வித்யா நான் ரெடியா தான் இருக்கேன்..யாரும் சேர்த்துக்க மாட்டேங்குறாங்க ;-)

//சரிங்க உங்கள எல்லாம் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு... இப்படியே உங்களை எல்லாம் விட்டுருறேன்... //

நாங்க இதுக்கெல்லாம் அசருற ஆளு இல்ல...நாங்கெல்லாம் ரணகளத்திலையும் கிளுகிளுப்ப பார்க்குற ஆளுங்க...

//Sivaram said...
One small help... enakku Tamil reading konjam he he he he... :D//

சிவராம் வேற இப்படி சொல்றாரே....ம்ஹீம் நமக்கு இங்கிளிபீச்சு :-) சுவாராசியமா இருக்காதே

Vidhya said...

Siva, i had already been telling my stories, but good that i chose this to shell it out... hope our makkal get to read it too... next time in english thambi.. for sure...

கிரி... என்ன நல்லவன்னு சொல்லிடீங்க.. ஒரே அழுகாச்சியா வருது :-)

Unknown said...

vidhya...intha doctor kathai ...copy kathai ellam ivvalavu naalu theriyama poche....therinja iruntha kojam sethu oti irukalam ;)